யாரினும் காதலம் என்றேனா | Yaarinum Kaadhalam Endrenaa

குறள்: #1314

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam) - Feigned Anger

குறள்:
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.

Kural in Tanglish:
Yaarinum Kaadhalam Endrenaa Ootinaal
Yaarinum Yaarinum Endru

விளக்கம்:
யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; ய‌ாரை விட...? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள்.

Translation in English:
'I love you more than all beside,' 'T was thus I gently spoke;
'What all, what all?' she instant cried; And all her anger woke.

Explanation:
When I said I loved her more than any other woman, she said "more than others, yes, more than others," and remained sulky

யாரினும் காதலம் என்றேனா | Yaarinum Kaadhalam Endrenaa யாரினும் காதலம் என்றேனா | Yaarinum Kaadhalam Endrenaa Reviewed by Dinu DK on August 29, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.